காத்தான்குடி பிரதேச செயலகத்தின் சமுர்த்தி அபிவிருத்தி பிரிவு மற்றும் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவும் இணைந்து நடத்தும் சிறு சந்தை (SED Mini Fair ) மற்றும் சமுர்த்தி அபிமானி வர்த்தக கண்காட்சி, விற்பனைச் சந்தை நிகழ்வு நேற்று (08) பிரதேச செயலாளர் நிஹாரா மௌஜுத் அவர்களின் தலைமையில் பிரதேச செயலகம் முன்றலில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் எம்.எஸ்.சில்மியா, பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எஸ். தனுஜா, நிருவாக உத்தியோகத்தர் எஸ்.எம்.ரஊப், மற்றும் சமுர்த்தி தலைமை முகாமையாளர் பத்மா ஜெயராஜ், சமுர்த்தி முகாமையாளர்கள், வங்கி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இக் கண்காட்சியின் போது சிறு தொழில் முயற்சியாளர்களின் ஆடைகள் , பாதணிகள், இனிப்புப்பண்டங்கள், மற்றும் மரக்கறிகள், சிறுவர்களுக்கான விளையாட்டுப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

