யோகி பாபு தெலுங்கு திரைப்படத் துறையில் அறிமுகம்

யோகி பாபு தெலுங்கு திரைப்படத் துறையில் முதன்முறையாக குர்ரம் பாப்பி ரெட்டி படத்தின் மூலம் அறிமுகமாகிறார்.

​தெலுக்கு திரையுலகின் நகைச்சுவை தலைவராகிய பிரம்மானந்தம் அவருடன் இணையவுள்ளார்.

தமிழ் திரைப்படத்துறையில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ள நகைச்சுவை நடிகர் யோகி பாபு, தற்போது தனது தெலுங்கு சினிமா பயணத்தை குர்ரம் பாப்பி ரெட்டி என்ற படத்தின் மூலம் தொடங்க இருக்கிறார்.

எப்போதும் தனது நேர்த்தியான நகைச்சுவையுடன் ரசிகர்களை கவர்ந்த யோகி பாபு, இப்போது தனது தனித்துவமான நடிப்பை தெலுங்கு ரசிகர்களிடம் கொண்டுவந்து சேர்க்கவுள்ளார்.

முரளி மனோகர்ரெட்டி இயக்கும் இந்தப் படத்தில், நகைச்சுவையின் லெஜன்டாக கருதப்படும் பத்மஸ்ரீ விருதுபெற்ற பிரம்மானந்தம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் இரண்டு நகைச்சுவை ஜாம்பவான்கள் ஒரே படத்தில் இணைவது காரணமாக, இப்படத்துக்குத் திரையுலகில் மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

படப்பிடிப்பு நேரத்தில், பிரம்மானந்தம் மற்றும் யோகி பாபுவுக்கு இடையே மிகுந்த நட்பு உருவானது. நடிகர் பிரம்மானந்தம் தன் வீட்டுக்கு யோகி பாபுவை அழைத்து, நேரம் செலவழித்து, இருவரும் மனம் திறந்து பேசினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *