மட்டக்களப்பில் போயா தினத்தில் மதுபான வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் வியாபாரி கைது

மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் பிரிவிலுள்ள புன்னைச்சோலை பிரதேசத்தில் போயா தினமான நேற்று(08) சட்டவிரோதமாக அரச மதுபான விற்பனையில் ஈடுபட்ட பெண் வியாபாரி ஒருவரை 60 கால் போத்தல்கள் கொண்ட மதுபான போத்தல்களுடன் கைது செய்ததுடன் 4490 ரூபா பணத்தை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்குக் கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான நேற்று பகல் குறித்த பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றை பெரும் குற்றத்தடுப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் கே.ஜி.எஸ். சஞ்ஜீவ தலைமையிலான பொலிஸார் சுற்றி வளைத்து முற்றுகையிட்டனர்.

இதன்போது அரச மதுபானங்களை சட்டவிரோதமாக விற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவரை கைது செய்ததுடன் கால் போத்தல்கள் கொண்ட 60 மதுபான போத்தல்களையும் 4490 பணத்தை மீட்டனர்.

இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *