கொழும்பு – கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஜபோஸ்லேன் பிரதேசத்தில் கடந்த சனிக்கிழமை (15) அதிகாலை கத்தியால் தாக்கப்பட்டு சகோதரர்கள் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
23 மற்றும் 24 வயதுடைய இரண்டு சகோதரர்களே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ஜபோஸ்லேன் பிரதேசத்தில் கடந்த சனிக்கிழமை இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட தகராறின் போது மன்னா கத்தியால் தாக்கப்பட்டு சகோதரர்கள் இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் வெல்லம்பிட்டி பிரதேசத்தில் வைத்து நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

