வாழைச்சேனை பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகாசமேத பாலீஸ்வரர் ஆலயத்தில் நேற்று(08) இந்த வருடத்தின் வரலட்சுமி விரத பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது
இவ் வழிபாடுகள் அனைத்தும் ஆலய பிரதம குருக்கள் சிவஸ்ரீ கண்ணன் குருக்களினால் ஆலய நிர்வாக சபையினர் தலைமையில் இடம்பெற்றது.
இவ் பூஜை வழிபாடுகளில் பல விரதக்காரர்கள் உபவாசம் இருந்து விரதங்களை அனுஷ்டித்தனர்.
திருவிளக்குப் பூஜை வழிபாடுகள், சுமங்கலி பூஜை வழிபாடுகள் மற்றும் வரலட்சுமி அம்மன் பூஜை வழிபாடுகள் இடம்பெற்று அம்மன் உள்வீதி வலம் வந்து பின்னர் சண்டேஸ்வரர் பூஜை வழிபாடுகளுடன் விரதம் இனிதே நிறைவுபெற்றது.

