மேஷம்
இன்று தொடங்கும் புதிய முயற்சி சாதகமாக முடியும். சிலருக்கு சகோதர வகையில் எதிர்பாராத ஆதாயம் கிடைக்கும். மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்கள் வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் நீண்டநாளாக எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். சக ஊழியர்களால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும்.
ரிஷபம்
உற்சாகமான நாள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்ச்சி அடைவீர்கள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். சக ஊழியர்கள் இணக்கமாக நடந்துகொள்வார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும்.
மிதுனம்
உற்சாகமான நாள். எதிர்பாராத பணவரவு உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். சிலருக்குக் குடும் பத்துடன் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். உறவினர்கள் வருகையால் வீட்டில் உற்சாகம் ஏற்படும். அலுவலகப் பணிகளில் மிக வும் கவனமாக இருக்கவும். உங்கள் பணிகளை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும்.
கடகம்
இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வழக்கமான காரியங்களிலும் கூடுதல் கவனம் தேவை. கணவன் – மனைவிக்கிடையே வீண் வாக்குவாதம் ஏற்படக்கூடும். ஒருவரையொருவர் அனுச ரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகள் வழியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் அதிகரிக்கும் பணிச்சுமையின் காரணமாக சோர்வு ஏற்படக்கூடும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.
சிம்மம்
புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். மாலையில் உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தருவதாக அமையும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். சக ஊழியர்கள் உங்கள் ஆலோசனையைக் கேட்டு வருவார்கள். வியாபாரம் சற்று சுமாராகத்தான் இருக்கும்.
கன்னி
காரியங்களில் அனுகூலம் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் பொருள் சேர்க் கைக்கும் வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத்துணை உங்கள் தேவையறிந்து பண உதவி செய்வார். சிலருக்கு உறவினர் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் உற்சாகமாகப் பணிகளில் ஈடுபடுவீர்கள். அதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடி இருக்கும்.
துலாம்
இன்று புதிய முயற்சியைத் தவிர்க்கவும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தடை, தாமதம் ஏற்படக்கூடும். சகோதரர்கள் உதவி கேட்டு நச்சரிப்பார்கள். கொடுத்த கடனில் ஒரு பகுதி திரும்பக் கிடைக்கும். தொலை தூரத்திலிருந்து எதிர்பார்த்த சுபச்செய்தி இன்று கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் சக ஊழியர்களின் விஷயங்களில் தலையிடவேண்டாம். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் மறைமுகத் தொந்தரவு ஏற்படக்கூடும்.
விருச்சிகம்
தேவையான பணம் கையில் இருப்பதால், செலவுகளை சமாளித்துவிடுவீர்கள். புதிய முயற்சி களைத் தவிர்க்கவும். சிலருக்கு வெளியூரில் இருக்கும் கோயில்களுக்குச் சென்று வழிபடும் வாய்ப்பு ஏற்படக்கூடும். வீட்டில் தொலைந்த பொருள் திரும்பக்கிடைக்கும். பணியிடத்தில் நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பது தேவையற்ற பிரச்னைகளைத் தவிர்க்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களால் சங்கடம் ஏற்படக்கூடும். விற்பனை சுமாராகத்தான் இருக்கும்.
தனுசு
புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். தேவையற்ற செலவுகள் ஏற்படும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். தந்தையுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு உண்டு என்பதால் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். அலுவலகத்தில் சக ஊழியர் களின் விஷயங்களில் தலையிடவேண்டாம். பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. வியாபாரத் தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும்.
மகரம்
உற்சாகமான நாள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வீர்கள். பிற்பகலுக்கு மேல் எதிர்பாராத பணவர வுக்கு வாய்ப்பு உண்டு. பிள்ளைகளால் பெருமை உண்டாகும். அலுவலகத்தில் மிகவும் உற்சாக மான சூழ்நிலையே காணப்படும். அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் விற்ப னையும் லாபமும் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கும்.
கும்பம்
எதிர்பாராத பணவரவு உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். புதிய முயற்சி சாதகமாக முடியும். உறவினர் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சகோதர வகையில் சுபச்செலவுகள் ஏற்படக்கூடும். சிலருக்கு புதிய டிசைனில் ஆடை வாங்கும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகப் பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபட்டு விரைந்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும்.
மீனம்
தெய்வ அனுகூலம் நிறைந்த நாளாக இருக்கும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பும் சிலருக்கு ஏற்படக்கூடும். பயணத்தின்போது கொண்டு செல்லும் பொருள்களை கவனமாகப் பார்த்துக்கொள்ளவும். உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். மனதில் தேவையற்ற குழப்பம் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் சக ஊழியர்களால் சில சங்கடங்களைச் சமாளிக்கவேண்டி வரும். பொறுமை அவசியம். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும்.

