செம்மணியில் சிலர் உயிருடன் புதைக்கப்பட்டிருக்கலாம் – சட்டத்தரணி நிரஞ்சன்

செம்மணியில் சிலர் உயிருடன் புதைக்கப்பட்டிருக்கலாம் என கருதுவதாக சட்டத்தரணி நிரஞ்சன் தெரிவித்துள்ளார்

ஜேர்மனியின் ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்

சிலர் உயிருடன் புதைக்கப்பட்டிருக்கலாம் என கருதுகின்றோம், என தெரிவித்துள்ள அவர்  ஏற்கனவே இறந்தநிலையில் அவர்கள் புதைக்கப்பட்டிருந்தால் அவர்களின் உடல்கள் வளையாது என தெரிவித்துள்ளார்.

சிலரின் கைகால்கள் வளைக்கப்பட்டதாக தோன்றுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கங்களை நம்பமுடியாது என்பதை வரலாறு எங்களிற்கு தெரிவித்துள்ளது. அவர்கள் சர்வதேச கண்காணிப்பை எதிர்ப்பார்கள்.

அரசாங்கத்திற்கு இனப்பிரச்சினை குறித்த புரிதல் இல்லை அவர்கள் அதனை புரிந்துகொள்ளவில்லை என தெரிவித்துள்ள சட்டத்தரணி நிரஞ்சன் ஊழலை ஒழித்தால் நாடு அமைதியாகயிருக்கும் என அவர்கள் கருதுகின்றனர், ஆனால் நாடு கடனிற்குள் சிக்கியமைக்கு இனப்பிரச்சினையும் ஒரு காரணம் என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *