கோறளைப்பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் வெரண்டினா அபிவிருத்தி சேவைகள் நிறுவனத்தின் நிதி அனுசரனையில் நேற்று முன் தினம் கும்புறுமூலை கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட வெம்பு கடற்கரையில் கிளின் ஸ்ரீ லங்கா வேலை திட்டதின் ஓர் செயற்பாடாக கடற்கரை பகுதி துப்பரவு செய்யப்பட்டது.
தூய்மைப்படுத்தல் செயற்பாடு காலை 8.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டு நண்பகல் 12.00 மணி வரை இடம்பெற்றது.
பிரதேச செயலகத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட இவ் வேலைத்திட்டதில் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.J. திருச்செல்வம், கோறளைப்பற்று பிரதேச செயலகத்தின் உதவி திட்டமிடல் பணிப்பாளர் திரு. R. கங்காதரன், வெரண்டினா அபிவிருத்தி சேவைகள் நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கும்புறுமூலை மீனவ சங்க உறுப்பினர்கள், கும்புறுமூலை விபுலானந்தா இளைஞர் கழக உறுப்பினர்கள் மற்றும் கிண்ணையடி வெண்ணிலா இளைஞர் கழக உறுப்பினர்களும் என்போர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

