தேர்தல் மூலோபாயத்திட்டம் தயாரிப்பது தொடர்பாக கருத்துக்களைப் பெறும் கலந்துரையாடல்

தேர்தல் மூலோபாயத்திட்டம் தயாரிப்பதற்கான பல்வேறு தரப்பினரின் கருத்துக்களைப் பெறும் நடவடிக்கையின் ஒரு கட்டமாக யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களின் கருத்துக்களைப் பெறும் கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்று(19) நடைபெற்றது.
தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் சிறீ ரத்னாயக்க தலைமையில் குறித்த கலந்துரையாடலானது நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் தேர்தல் திணைக்களத்தின் திட்டமிடல் மற்றும் ஆராய்ச்சி பணிப்பாளர் சன்ன பி.டீ சில்வா, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்கதிபர் ம. பிரதீபன், யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்ட உதவித்தேர்தல் ஆணையாளர்கள், இரு மாவட்டங்களையும் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள், உள்ளூராட்சி உறுப்பினர்கள், தேர்தல் தொடர்பான திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *