திட்டத்தை கண்காணிப்பதற்கான உலக வங்கியின் விஜயம்

காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாய திட்டத்தினால் 100 மில்லியன் செலவில் செம்மன்றுப்பகுதியில் புனரமைக்கப்பட்ட உவர் நீர் தடுப்பணை மற்றும் விவசாய நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தெளிகரைப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பூசணி மற்றும் நிலக்கடலை பயிர்செய்கையின் விளைச்சலை மேற்பார்வை செய்வதற்கான விஜயம் உலக வங்கியினால் மேற்கொள்ளப்பட்டது.

இங்கு கலந்து கொண்ட அப்பகுதி மக்கள் புனரமைக்கப்பட்ட உவர் நீர் தடுப்பணை கிராமங்களுக்கு செல்லும் உவர் நீரை தடுத்து நிலம் மற்றும் நிலத்தடி நீரின் தரத்தை உயர்த்தி, விவசாயம் செய்யும் காணியின் அளவைக் கூட்டி தங்களது வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு உறுதுணையாக இருக்கின்றது என தெரிவித்துள்ளனர்.

உலக வங்கியின் விவசாயப்பகுதிக்கு பொறுப்பான மேலாளர் திரு. வில்லமார் தலைமையிலான உலக வங்கியின் குழு, திட்டத்தின் பிரதி திட்ட பணிப்பாளர் திரு. ஏ.ஜி.சி பாபு, பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் (கிளிநொச்சி பிராந்தியம்) கே. கருணாநிதி, துறை சார்ந்த உத்தியோகத்தர்கள் மற்றும் அப்பகுதி விவசாயிகள் ஆகியோர் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *