பருத்தித்துறையைச் சேர்ந்த கவிஞர் சு. ஜெயசீலன் எழுதிய ‘புல்வெளி புள்வெளி’ எனும் சூழலியல் கவிதை நூல் 16ஆம் திகதி அன்று யாழ் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்ற யாழ் சர்வதேச புத்தகத் திருவிழாவில் வெளியிடப்பட்டது.
சமகால சூழலியல் பிரச்சினைகள், இயற்கைச் சமநிலைக்கு பறவைகள், விலங்குகள் பங்களிக்கும் விதங்கள் மற்றும் ஐ.நா சபையின் 17 வளர்ச்சி இலக்குகளையும் எம் மக்களின் கதைகளையும் கருப்பொருட்களாகக் கொண்டு கவிதை நூல் அமைந்துள்ளது.
இந் நிகழ்வில் திரு வேல் நந்தகுமார் தலைமையில், திரு கங்காதரன், பேச்சாளர்களாகிய கேசிகா மற்றும் ஹார்த்தியாயினி ஆகியோர் நூல் குறித்து உரையாற்றினர்.
முதற்பிரதியை புத்தகத்திருவிழாவின் ஏற்பாட்டாளராகிய திரு வசீகரன் பெற்றுக்கொண்டார்.


