ஸ்மார்ட் கிட்ஸ் பாலர் பாடசாலை, பகல் நேர சிறுவர் பராமரிப்பு நிலையத்தின் பசுமை தின நிகழ்வு

ஸ்மார்ட் கிட்ஸ் பாலர் பாடசாலை மற்றும் பகல் நேர சிறுவர் பராமரிப்பு நிலையத்தின் பசுமை தின நிகழ்வு இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது.

ஸ்மார்ட் கிட்ஸ் பாலர் பாடசாலையின் முகாமையாளர் திருமதி.வீ.மோகநாதன் தலைமையில் மட்டக்களப்பு லேக் வீதியில் அமைந்துள்ள பாலர் பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜஸ்டினா முரளிதரன் கலந்து சிறப்பித்தார்.

இந் நிகழ்விற்கு விசேட அதிதியாக மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளர் என்.தனஞ்ஜெயன் கலந்து கொண்டார்.
குறித்த நிகழ்வில் பசுமையான வாழ்வை பறைசாற்றும் வகையில் மாணவர்களினால் அழகிய பாடல் மற்றும் நடனம் என்பவை அரங்கேற்றப்பட்டதுடன், அரசாங்க அதிபரினால் பசுமையைப் பறைசாற்றும் வகையில் கேக் வெட்டப்பட்டது.
அத்துடன், இதன் போது மாவட்ட அரசாங்க அதிபருக்கு பாலர் பாடசாலை நிருவாகத்தினரால் பொன்னாடை போர்த்தி மலர் மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *