கண்டி- வெலம்பொட முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் அபிவிருத்திக் குழுவின் உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ், ரவூப் ஹக்கீம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை ஆகியோரை இன்று பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் சந்தித்தனர்.
இச்சந்திப்பின் போது பாடசாலையின் எதிர்கால அபிவிருத்தி மற்றும் நிவர்த்தி செய்யப்பட வேண்டிய தேவைகள் குறித்தும் பேசப்பட்டு அதற்கான முன்மொழிவுகளும் வழங்கி வைக்கப்பட்டன.
பாடசாலையின் அதிபர் எம்.எஸ்.எம்.பைறூஸ் தலைமையில் இடம்பெற்ற இச் சந்திப்பில் பாடசாலை அபிவிருத்திக் குழுவின் செயலாளர் எஸ்.எம்.ஸாஹிர் எஸ்எம்சி குழு ஆசிரியர்கள் மற்றும் அபிவிருத்திக் குழுவின் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


