யாழ்ப்பாணம், செம்மணியில் 9 கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுக்கப்பட்ட ‘நீதியின் ஓலம்’ என்ற கையெழுத்து போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்படவுள்ளது.
குறித்த போராட்டமானது, மாணவி கிருசாந்தி கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய, செம்மணி பகுதியில் பிரத்தியேகமாக ஒழுங்கு செய்யப்பட இடத்தில் நேற்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதேவேளை, மன்னாரில் மேற்கொள்ளப்படும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக வவுனியா இளைஞர்களின் ஏற்பாட்டில், சுற்றுச் சூழலுக்கான இளைஞர் நடவடிக்கை அமைப்பின் பங்கேற்பில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

