அட்டாளைச்சேனை விளையாட்டுத்துறை சார்ந்த குழுவின் விஷேட கூட்டம் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை தலைமையில் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எஸ்.எம். உவைஸ், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஏ.சி. அஹமட் அப்கர், அட்டாளைச்சேனை பிரதேச சபை செயலாளர் எல்.எம். இர்பான், அட்டாளைச்சேனை விளையாட்டுத்துறை சார்ந்த குழுவின் தலைவர் எஸ்.எல். தாஜுதீன் ( ஓய்வு பெற்ற அம்பாறை மாவட்ட விளையாட்டு பயிற்றுவிப்பாளர்), அட்டாளைச்சேனை விளையாட்டு உத்தியோகத்தர்கள், நடுவர்கள் சம்மேளனத்தின் உறுப்பினர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது, அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்திற்கான அபிவிருத்தித் திட்டம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டு அதற்கான திட்ட வரைபுகள் இக்குழுவினரால் தயாரிப்பதென தீர்மானிக்கப்பட்டது.


