விசாரணையை வலியுறுத்தி இளங்குமரன் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை நோயாளி நலன்புரிச்சங்கம் பொய்யான பிரச்சாரங்களை மேற்கொண்டு மக்களை அழைத்து போராட்டம் மேற்கொண்டமை அரசுக்கெதிரான நடவடிக்கை விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தி பாராளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் இன்று(30) முறைப்பாட்டை பதிவு செய்தார்.

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை வளாகத்தில் நெதர்லாந்து அரசின் நிதியுதவியில் அமைக்கப்பட்டுள்ள பெண்நோயியல் பிரிவு வைத்திய உபகரணங்களை வேறு மாகாணங்களுக்கு கொண்டு செல்ல முற்படுவதாக நோயாளி நலன்புரிச்சங்கம் துண்டுப்பிரசுரம் மூலம்  தெரிவித்து நேற்றைய தினம் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

குறித்த விடயம் பொய்யான விடயம் அரசுக்கெதிரானது என தெரிவித்தே குறித்த முறைப்பாட்டை பதிவு செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *