முத்து நகர் விவசாயிகள் ஐவரையும் விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம்

திருகோணமலை சீனக்குடா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முத்து நகர் விவசாயிகள் ஐவரையும் விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம் சனிக்கிழமை (30) சீனக் குடா பொலிஸ் நிலையம் முன்பாக இடம்பெற்றது.

முத்து நகர் பகுதி விவசாய காணியில் தனியார் நிறுவனத்தினர் பெகோ இயந்திரம் மூலமாக (27) சூரிய மின் சக்தி திட்டம் தொடர்பான வேலைத் திட்டத்தை ஆரம்பிக்க முற்பட்ட வேலையில் அங்கு குறித்த விவசாயிகள் சென்று தடுத்து நிறுத்த முற்பட்ட வேலையில் வாய்த்தகராறு ஆரம்பமானதுடன் பின்னர் கலவரமாகி தனியார் நிறுவன ஊழியர்கள் பொல்லால் விவசாயிகளை தாக்கியுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து சீனக் குடா பொலிஸாரினால் ஐந்து விவசாயிகள் கைது செய்யப்பட்டு திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 04ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த விவசாயிகளை விடுதலை செய்யக் கோரியும் பெக்கோ இயந்திர சாந்தவை கைது செய்யக் கோரியும் இப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

முத்துநகர் விவசாயிகளை தாக்கிய அரசாங்க குண்டர்களை கைது செய், அநியாயமாய் சிறையில் அடைக்கப்பட்ட விவசாயிகளை உடனடியாக விடுதலை செய், நிறுவனங்களுக்கு வழங்கிய விவசாய நிலங்களை விவசாயிகளுக்கு திருப்பிக் கொடு, திருகோணமலையின் வளங்கள் சூரையாடப்படுவதை நிறுத்து, எங்கள் காணிகளை எங்களுக்கு கொடு, கம்பனிகளுக்கு இலாபம் எங்களுக்கு நடுத்தெரு போன்ற பல வாசகங்களை ஏந்தியவாறும் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *