டிஜிட்டல் தள பார்வையாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் முன்னணி டிஜிட்டல் தளங்கள் வாரந்தோறும் புதிய இணைய தொடர்களை வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 19 ஆம் திகதியன்று ஜியோ ஹாட்ஸ்டார் எனும் டிஜிட்டல் தளத்தில் பொலிஸ் பொலிஸ் (போலீஸ் போலீஸ்) எனும் புதிய இணைய தொடர் ஒளிபரப்பாகிறது. இதற்கான பிரத்யேக காணொளியை டிஜிட்டல் தள நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.
இந்த இணைய தொடரில் ‘சரவணன் மீனாட்சி’ புகழ் நடிகர் மிர்ச்சி செந்தில் , ஜெயசீலன் தங்கவேல் ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் நடிகை ஷபானா ஷாஜகான் சட்டத்தரணி லலிதாம்பிகா கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார்.
இதற்காக வெளியிடப்பட்டிருக்கும் பிரத்யேக காணொளி ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. மேலும் இந்தத் தொடரில் முதன்மையான கதாபாத்திரங்களுடன் சுஜிதா தனுஷ் , சத்யா, வின்சென்ட் ராய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
‘ஆபீஸ்’, ‘ஹார்ட் பீட் சீசன் 2’ ஆகிய இணைய தொடர்கள் ரசிகர்களை மகிழ்வித்து வரும் தருணத்தில்.. இந்த ‘ ‘பொலிஸ் பொலிஸ் ‘ (போலீஸ் போலீஸ் )எனும் தொடரும் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

