மயிலம்பாவளியில் சிறுவர் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

சிறுவர் பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவர ஒன்றிணைந்து செயல்படுவோம் எனும் செயற்திட்டத்தின் ஊடாக ஷேபா சிறுவர் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மயிலம்பாவளி பரி. பவுல் தேவாலய சிறுவர்களால் மலரைப் போல் பூக்கின்ற சிரிக்கின்ற எம் மழலைச் செல்வங்களின் உணர்வுகளை மதிப்போம், அவர்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்போம் எனும் தொனிப்பொருளின்கீழ் விழிப்புணர்வு நடைபவனி நேற்று முன்தினம்(30) நடைபெற்றது.

இந்த நடைபவனியானது மயிலம்பாவெளி பரி. பவுல் ஆலயத்தில் இருந்து பிரதான வீதியினூடாகச் சென்று மயிலம்பாவெளி விபுலானந்தா பாடசாலை மைதானத்தில் நிறைவடைந்தது.

இதன் போது சிறுவர்கள்: ஒவ்வொரு சிறுவர்களும் எமது சொத்து, சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு மன்னிப்பு இல்லை, சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்து மற்றும் ஆதரவற்ற செல்வங்களுக்கு கை கொடுப்போம் போன்ற பதாகைகளை ஏந்தியவாறு பேரணியில் ஈடுபட்டனர்.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக ஷேபா திட்டத்தின் இயக்குனர் அருட்பணி ஜி. திவ்யபாலன் கலந்து கொண்டார்.

அத்துடன் ஷேபா திட்ட முகாமையாளர் ரொட்ணி ஜெயானந், சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் ஏ.ஆர்.எம். றுசைட், பரி.பவுல் ஆலய குரு மூப்பர் டிலக்க்ஷன், மயிலம்பாவெளி சுப்பர் கிங்ஸ் கழகத்தின் தலைவர், ஏறாவூர் பொலிஸ் உத்தியோகத்தர்கள், கழக உறுப்பினர்கள், சிறுவர்கள் மற்றும் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

நடைபவனியின் முடிவில்; சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுக்கும் வகையிலான விழிப்புணர்வு வீதி நாடகம் ஆற்றுகை செய்யப்பட்டதுடன் பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *