பளையில் இரண்டாம் நாளாக தொடரும் கையெழுத்து போராட்டம்

செம்மணி மற்றும் இலங்கையின் வடக்கு கிழக்கு மண்ணில் உள்ள மனிதப் புதை குழிகளுக்கும் நடைபெற்ற இனப்படுகொலைக்குமான சர்வதேச நீதி கோரிய கையெழுத்துப் போராட்டம் கடந்த 29ம் திகதி ஆரம்பமாகிய நிலையில் நேற்று(02) பளை நகர பகுதியில் பலத்த வரவேற்பின் மத்தியில் காலை 9 மணியளவில் ஆரம்பமாகி இன்றும் மிகவும் சிறப்பாக இடம்பெற்று வருகிறது.
இவ் கையெழுத்து போராட்டமானது தமிழ் தேசிய கட்சிகள் மற்றும் பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் இடம்பெற்று வருவதோடு இன்றைய தினம் கையெழுத்து போராட்டத்தில் பளை பிரதேச சபை உறுப்பினர் ஈஸ்வரன் டயாளினி, சுபாஸ்கரன் சுஜீபா, பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் கணைச்செல்வன், பொதுமக்கள் மற்றும் சகோதர மொழியினத்தவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *