ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளர் கடமையேற்பு

ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட திருமதி வனஜா செல்வரெட்ணம் இன்று(03) காலை 09.00 மணிக்கு அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் முன்னிலையில் கடமையேற்றார்.
இதன் போது மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. சிவகரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு. பா.ஜெயகரன் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் திரு. ஆ. சத்தியமூர்த்தி ஆகியோர் உடனிருந்தார்கள்.
மேலும் இன்றைய தினமே ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்தில் தமது கடமையினைப் பொறுப்பேற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *