இலங்கைப் பொலிஸ் திணைக்களத்தின் 159 வது பொலிஸ் தின நிகழ்வானது திருக்கோவில் பொலிஸ் பரிசோகர் பீரீஸ் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் சுஜித்வெதமுல்ல பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
மேலும் திருக்கோவில் ரூபேஷ் குளப்பகுதியில் கடந்த யுத்தகாலத்தின் போது படுகொலை செய்யப்பட்ட 600க்கு மேற்பட்ட பொலிஸ் உத்தியோத்தர்களின் நினைவுத் தூபிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வும் அதனைத் தொடர்ந்த திருக்கோவில் சென்ஜோசப் மகளிர் இல்ல மற்றும் மெதடிஸ் மகளிர் இல்ல மாணவர்களூக்கு கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வு திருக்கோவில் பொலிஸாரின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
மேலும் இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் டி.பி.எச். கலனசிறி அக்கரைப்பற்று உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் பொலிஸ் நிலை பொறுபத்திகாரிகள் பொலிஸ் பிரதான பரிசோதகர்கள் பொலிஸ் உத்தியோத்தர்கள் மதத்தலைவர்கள் என பலரும் இவ் நிகழ்வில் கலந்து கொண்டதுடன் மும்மத ஆராதனைகளும் இடம்பெற்றது.
அத்துடன் திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் விசேட பூசை வழிபாடும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

