கிளிநொச்சி மாவட்டத்தின் இராமநாதபுரம் புதுக்காடு பகுதியில் அமைந்துள்ள திருவருள்மிகு பூர்ணா புஷ்பகலா சமேத ஐயனார் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா நேற்று(05) சிறப்பாக நடைபெற்றது.
கடந்த 27ஆம் திகதி ஆரம்பமாகி நேற்று தேர்த்திருவிழா சிறப்புற நடைபெற்றது.
இத்தேர்த்திருவிழா நிகழ்வில் இந்தியாவின் கேரளா மாநிலத்தின் பிரபல்யமான கலைகளில் ஒன்றான சண்டி மேள வாத்தியம், கதகளி ஆட்டம், பரதநாட்டியம், யானை ஊர்வலம் மற்றும் பரதநாட்டியம் என பல்வேறு வகையான நிகழ்வுகளுடன் தேர்த் திருவிழா சிறப்புற நடைபெற்றது.


