சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியின் பரிசளிப்பு விழாவும், நிறுவுநர் தினமும்

யாழ்ப்பாணம் சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியின் பரிசளிப்பு விழாவும், நிறுவுநர் தினமும் கடந்த 02ஆம் திகதி பிற்பகல் 01.00க்கு சுப்பையா உடையார் தெய்வானைப்பிள்ளை திறந்த வெளி அரங்கில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வானது கல்லூரி அதிபர் திருமதி. க. சுலபாமதி தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வட மாகாண கல்வி பணிப்பாளர் திரு யோ. ஜெயச்சந்திரன் கலந்து கொண்டதுடன் சிறப்பு விருந்தினராக இளைப்பாறிய இணைப்பணிப்பாளர் விக்ரோறியன் திரு. கிருபானந்தமனுநீதி மற்றும் கௌரவ விருந்தினராக விக்ரோறியன் திரு சுப்பையா வரதராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *