மட்டு மாநகர சபையை நிச்சயமாக நாம் கைப்பற்றுவோம் : வேட்பாளர் முத்துலிங்கம் துதிஸ்வரன்

புளியந்தீவு வட்டாரம் ஆனது மாநகர சபைக்கு உட்பட்ட பகுதியில் அமைந்திருந்தாலும் கடந்த இருபது வருடங்களாக இப்பகுதியில் அடிப்படை வசதிகள் பின்தங்கிய நிலையில் காணப்படுவதாகவும் இப்பகுதியின் குறுக்கு வீதிகள்.

இதுவரை காலமும் புனரமைக்கப்படாமல் உள்ளதாகவும் இதற்கெல்லாம் தீர்வு காண்பதற்காகவே இப்பகுதி மக்களின் வேண்டுகோளுக்கு நாங்கள் தேசிய மக்கள் சக்தி கட்சியில் இம்முறை தேர்தலில் களமிறங்கி உள்ளேன்.

எமது வெற்றி நிச்சயம் அதன் பின்பு இந்த வட்டாரம் எழுச்சி காணும் எமது ஜனாதிபதியின் கரங்களை பலப்படுத்துவதோடு நமது கட்சியில் உள்ள அனைத்து வேட்பாளர்களும் திறமையானவர்கள் இடம்பெற உள்ள தேர்தலில் மட்டு மாநகர சபையை நிச்சயமாக நாம் கைப்பற்றுவோம்.

தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாநகர சபை வேட்பாளர் நேற்று மாலை இடம்பெற்று புளியந்தீவு வட்டார தேர்தல் அலுவலக திறப்பு விழாவின் போது இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *