அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தில் அம்பாறை மாவட்ட செயலாளர், மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர், திருக்கோவில் பிரதேச செயலாளர மற்றும் திருக்கோவில் சமுர்த்திப் பிரிவு ஆகியவற்றின் ஏற்பாட்டில் கம்பஹா உள்ளூர் ஆயுர்வேத மருத்துவ பல்கலைக் கழகத்தின் பீடாதிபதி டொக்டர் வக்கும்புற தலைமையில் திருக்கோவில் கலாசார மண்டபத்தில் மாபெரும் ஆயுர்வேத வைத்திய முகாம் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஜெகராஜன் கலந்து கொண்டார்.
மேலும் இந் நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலாளர் கஜேந்திரன், திருக்கோவில் பிரதேச சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் அரசரெட்ணம், கருத்திட்ட முகாமையாளர் புண்ணியசீலன், வைத்திய பேராசிரியர் சிரியானி பீரிஸ், டொக்டர் வசந்த விக்ரமராச்சி, டொக்டர் விதாரன, டொக்டர் ஹேமா வக்கும்புற, டொக்டர் நுவன் மாரசிங்க, 10பேர் கொண்ட உடல் மருத்துவக் குழுவினர் மற்றும் பொது வைத்திய குழுவினர், வைத்திய ஊழியர்கள், திருக்கோவில் சமுர்த்தி பிரிவு உத்தியோத்தர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த நிகழ்வானது காலை 8.45 மணியளவில் ஆரம்பமாகி பிற்பகல் 01மணிவரை இடம்பெற்றதுடன் சிறந்த மருந்துவ சேவைகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


