வயல்வெளியில் மறைத்து வைக்கப்பட்ட கசிப்பு போத்தலுடன் இருவர் கைது

வயல்வெளியில் மறைத்து வைக்கப்பட்ட கசிப்பு போத்தலுடன் இரண்டு சந்தேக நபர்களை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி பாலத்திற்கு அருகில் உள்ள ஆற்றோர வயல்வெளியில் ஞாயிற்றுக்கிழமை(7) முற்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கல்முனை விசேட அதிரடிப்படையினரின் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றுக்கமைய குறித்த பகுதியில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இதன்போது சுமார் 23 மற்றும் 26 வயதுடைய வீரமுனை பகுதியை சேர்ந்த சந்தேக நபர்களை 40 000 மில்லி லீற்றர் கசிப்புடன் கைது செய்துள்ளனர்.

கைதான இச் சந்தேக நபர்கள் உட்பட சான்றுப் பொருட்கள் காரைதீவு பொலிஸ் நிலையத்தில் கல்முனை விசேட அதிரடிப்படையினர் சட்ட நடவடிக்கைக்காக ஒப்படைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *