ஏறாவூரில் பழைய பாடசாலைக் காணியில் கைக்குண்டுகள் மீட்பு

மட்டக்களப்பு – ஏறாவூர் ஓட்டுப்பள்ளிக்கு அருகாமையில், உள்ள பழைய பாடசாலையொன்று அமைந்துள்ள காணியில், ஆயுதங்கள் இருப்பதாக, பொலன்னறுவை இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய, நீதிமன்ற உத்தரவைப் பெற்று, பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவ புலனாய்வுப் பிரிவினர் இணைந்து, இன்று(09) காலை பொலிஸ் பொறுப்பதிகாரி பிரசாத் லியனகே தலைமையில் அகழ்வுப் பணி முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது புதைக்கப்பட்டிருந்த நான்கு கைக் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

இதனைத்தொடர்ந்து மேலும் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *