விவசாய பீடத்தின் சேவையை சமூகத்திற்கு வழங்கும் பொருட்டு யாழ் பல்கலைக்கழக விவசாய பீட சமுதாய மேம்பாட்டுக்குழுவின் ஏற்பாட்டில் தானியங்கி நுண்நீர்ப்பாசனத்தில் வெற்றிகரமான செய்கை பண்ணப்பட்ட கத்தரிச்செய்கை அறுவடை விழா கிளிநொச்சி திருவையாறுப்பகுதியில் கோவிப்பிரியன் விவசாயி வயலில் இன்று(09) நடைபெற்றது.
விவசாய பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் பகீரதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக மாவட்ட அரசாங்கதிபர் முரளிதரன் கலந்து கொண்டார்.
இந் நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக பேராசிரியர் ரோறு ரமிர்ஸ்னாகா, சிவமோகன் இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனத்தின் தலைவர் என பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த நிகழ்வில் விரிவுரையாளர்கள், விவசாய பீட பண்ணை முகாமையாளர், கிராமசேவையாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர், விவசாயிகள் மற்றும் பாடசாலை மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


