யாழ்ப்பாணம், காங்கேசன்துறை வீதியில் மருதனார்மடம் சந்திப்பகுதியில் இன்று(10) மூன்று மோட்டார் சைக்கிள் மற்றும் துவிச்சக்கரவண்டி ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துத்துக்குள்ளாகியதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்து சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
துவிச்சக்கர வண்டி ஒன்றில் சென்றவர் வீதியை கடக்க முற்பட்ட வேளை பின்பக்கமாக வந்த மோட்டார் சைக்கிள் முன்னால் சென்ற துவிச்சக்கர வண்டி மீது மோதியது.
அதன் பின்னர் அந்த மோட்டார் சைக்கிள் நிலைகுலைந்து வலது பக்கம் சென்ற போது எதிர்த்திசையில் வந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் சிக்கியவர்கள் சிறிய காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து சம்பவம் குறித்தான விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

