அனுமதி இன்றி அரச காட்டுக்குள் உட்புகுந்து சட்டவிரோதமான முறையில் பெறுமதி மிக்க காட்டுத் தடிகளை வெட்டி யாழ்ப்பாணம் கொண்டு செல்வதற்காக கனரக பார ஊர்தி ஒன்றில் நள்ளிரவில் கொண்டு செல்லப்பட்ட காட்டுத் தடிகள் தர்மபுரம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக இன்று(12) வீதி சோதனைகள் மூலம் சட்டவிரோதமான முறையில் எடுத்துச் செல்லப்பட்ட காட்டுத் தடிகள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை கிளிநொச்சி நீதிமன்றில் முட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

