கிளிநொச்சி மாவட்டத்தின் உருத்திரபுரம் உழவர் ஒன்றிய விளையாட்டு கழகம் மற்றும் சனசமூக நிலையத்தினரின் நெறிப்படுத்தலில் இரத்ததான முகாம் நடைபெற்றது.
அமரர் முருகேசு பராசக்தியின் முதலாம் ஆண்டு நினைவாக இன்று(13) இரத்ததான முகாம் மற்றும் பயன்தரும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
இதன் போது 50க்கும் மேற்பட்டவர்கள் குருதிக்கொடையினை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.


