தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான கூட்டம்

இலங்கை தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான கூட்டம் இன்று(14) காலை ஆலையடிவேம்பில் நடைபெற்றது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான க.வி.கோடீஸ்வரன் கலையரசன் ஆகியோர் முன்வரிசையில் அமர்ந்திருந்தனர்.

அம்பாறை மாவட்டத்தில் உள்ள பொத்துவில், திருக்கோவில், காரைதீவு, சம்மாந்துறை மற்றும் நாவிதன்வெளி ஆகிய பிரதேச சபைகளிலுள்ள கட்சியின் தவிசாளர்களும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

இதன் போது மாவட்ட ரீதியிலான பல்வேறு பிரச்சனைகள், தேவைகள் மற்றும் சவால்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *