முல்லைத்தீவு விசுவமடு மகா வித்தியாலய கணிதப்பிரிவு உயர்தர மாணவன் தவயோகன் தர்சாந்தின் அறிவியல் சார்ந்த நூலான விண்வெளி யுத்தம் என்ற நூல் வெளியீட்டு நிகழ்வு இன்று காலை விசுவமடு மத்தி சனசமூக நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.
வணக்கத்திற்குரிய ரீ.எஸ்.யோசுவா தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக புதுக்குடியிருப்பு கோட்டக் கல்விப் பணிப்பாளர் பாஸ்கரன், கலந்து கொண்டார்.
சிறப்பு விருந்தினராக முல்லைத்தீவு மாவட்ட செயலக உதவி மாவட்ட செயலாளர் கேகிதா லிசோ கலந்து கொண்டார்.
இந் நிகழ்வில் விசுவமடு மகாவித்தியாலய அதிபர் நடராசா கருணாகரன், கோம்பாவில் விக்கினேஸ்வர வித்தியாலய அதிபர் யோகேஸ்வரன் மகேஸ்வரன், மூத்த கலைஞரும் சமூகசெயற்பாட்டாளருமான அன்னலிங்கம் சண்முகலிங்கம், திருகோணமலை படைப்பாளர் தங்கராசா சாளினி, விசுவமடு மத்தியசனசமூக நிலையம், திறன்விருத்தி நிலையத்தின் இணைப்பாளர் றயூலா திருச்செல்வன், பிரதேச மூத்த படைப்பாளர் கலாபூஷணம், பன்முக எழுத்தாளரும் அறிவிப்பாளருமான நடராசா இராமநாதன்
பாடசாலை அதிபர் சிவசுப்பிரமணியம், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், பிரதேச பொது அமைப்பு சார்ந்தோர் மற்றும் பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



