ஏறாவூர் நகரசபை எல்லைக்குள் வசிக்கும் பொதுமக்களுக்கு நகரசபையின் கொளரவ தவிசாளரால் முக்கிய அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
“மறுமலர்ச்சி நகரம்” எனும் தொனிப்பொருளின் கீழ் அரசாங்கத்தினால் பிரகடனம் செய்யப்பட்டுள்ள உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு ஏறாவூர் நகரசபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நடமாடும் சேவை நாளை(15) திங்கட்கிழமை காலை 9.30 மணி தொடக்கம் பிற்பகல் 4.00 மணி வரை ஏறாவூர் நகரசபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
ஏறாவூர் நகரசபை, ஏறாவூர் நகர பிரதேச செயலகம், ஏறாவூர்ப் பற்று செங்கலடி பிரதேச செயலகம், ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், இலங்கை மின்சார சபை, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை, அரச கால் நடை வைத்திய அதிகாரி அலுவலகம், விவசாய திணைக்களம், மத்திய சுற்றாடல் அதிகார சபை மற்றும் ஏறாவூர் பொலிஸ் நிலையம் ஆகிய 10 அரச அலுவலகங்களைச் சேர்ந்த அதிகாரிகள் இந்த நடமாடும் சேவையின்போது சமூகமளித்து பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கவுள்ளனர்.
எனவே, மேலே கூறப்பட்ட அரச அலுவலகங்கள் மூலமாக தமது தேவைகளை நிறைவு செய்ய விரும்பும் பொதுமக்கள் நாளை ஏறாவூர் நகரசபைக்கு சமூகமளித்து தமது கோரிக்கைகளை முன்வைத்து உரிய தீர்வுகளைப் பெற்றுக்கொள்ளுமாறு தவிசாளர் கேட்டுக்கொள்கின்றார்.
ஏறாவூர் நகரசபையினால் வழங்கப்படும் சேவைகள்
1. ஆதனப் பெயர் மாற்றங்களை உடனடியாக செய்தல்
இதற்காக அறவிடப்படும் கட்டணம் ஆயிரம் ரூபாயிலிருந்து ஐந்நூறு ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.
2. தண்டப்பணம் இல்லாமல் ஆதன வரியை செலுத்தவதற்கான ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது நாளை 15ம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை ஆதனவரி செலுத்துபவர்களுக்கு இந்த வருடத்திற்கான தண்டப்பணம் கழிவாக வழங்கப்படவுள்ளது.
3. எறாவூர் பிரதேச பொதுமக்கள தவிசாளருக்கு தமது முறைப்பாடுகளை நேரடியாகத் தெரிவிப்பதற்கான (டெல் த சேர்மன்) மென்பொருள் அங்குரார்ப்பனம் செய்து வைக்கப்படவுள்ளது.
4. நிகழ்நிலை ஒன்லைன் மூலம் மக்கள் தமது கட்டணங்களை செலத்துவதற்கான முறைமை அறிமுகம் செய்து வைக்கப்படவுள்ளது.
அரச கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் வழங்கப்படும் சேவைகள்
1. கோழிகளுக்கு இலவச தடுப்பு மருந்து வழங்கப்படும்
2. வீடுகளில் வளர்க்கப்படும் எல்லா செல்லப்பிராணிகளுக்கும் தடுப்பூசி வழங்கப்படும்
3. கால்நடைகளுக்கு காது அடையாளமிடல்
4. கால்நடை பண்ணைகளை பதிவு செய்தல் மற்றும் புதுப்பித்தல்
5. நல்ல இன கோழிக்குஞ்சுகளை பெற்றுக்கொள்ளல்
6. கால்நடை பராமரிப்பு தொடர்பில் ஆலோசனைகளை வழங்குதல்
7. பண்ணையாளர்களுக்கு உதவித்திட்டங்களை வழங்குதல்
8. புல் வளர்ப்பிற்கான புற் துண்டங்களை வழங்குதல்
பிரதேச செயலகத்தினால் வழங்கப்படும் சேவைகள்
1. பிறப்பு, இறப்பு மற்றும் திருமண பதிவுகளை பெறல்
2. தேசிய அடையாள அட்டை விண்ணப்பங்கள்
3. வாகன பெயர்மாற்றம்
4. காணி தொடர்பான விடயங்கள்
5. அஸ்வெசும நிகழ்ச்சித்திட்டம் தொடர்பான விடயம்
எனவே, நாளை திங்கட்கிழமை ஏறாவூர் நகரசபையில் நடைபெறவுள்ள நடமாடும் சேவைக்கு சமூகமளித்து பயனடையுமாறு ஏறாவூர் நகரசபை தவிசாளர் அல்ஹாஜ் எம்.எஸ்.நழீம் கேட்டுக்கொள்கின்றார்.


