யாழ்ப்பாண நகரப் பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து 27 கிராம் 100 மில்லி கிராம் அளவுடைய ஐஸ் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண குற்றத் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இருவரும் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

