முன்னணி நடிகருக்கான எம்மி விருதை வென்றார் இங்கிலாந்தின் இளம் நடிகர் ஓவன் கூப்பர்!!

இங்கிலாந்தின் இளம் நடிகரான ஓவன் கூப்பர் முன்னணி நடிகருக்கான எம்மி விருதினை (EMMY AWARDS – 2025) வென்றார்.

“அடொலெசென்ஸ்” (Adolescence) என்ற நாடகத் தொடரின் ஊடாக தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தியமைக்காக ஓவன் கூப்பர் இந்த விருதினை பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

சிறப்பு வாய்ந்த எம்மி விருதினை 15 வயதான ஓவன் கூப்பர் வென்றுவிட்டமை, தற்போது திரையுலகினர் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.

ஓவன் கூப்பர் இவ்விருதினைப் பெற்றபோது “மூன்று வருடங்களுக்கு முன்பு நான் ஒன்றுமில்லாதவன். இப்போது நான் இங்கே நிற்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *