தகவல் தொழில்நுட்ப கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்

தகவல் தொழில்நுட்பக் கற்கை நெறியைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ்களை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் வழங்கி வைத்தார்.
சைல்ட் அக்சன் லங்கா முகாமையாளர் அஃரா வக்கில் தலைமையில் ஒல்லாந்தர் கோட்டையில் அமைந்துள்ள பழைய மாவட்ட செயலகத்தில் நேற்று(15)  சான்றிதழ்ககள் வழங்கி வைக்கப்பட்டன.

ஏறாவூர்ப் பற்று செங்கலடி பிரதேச செயலகப் பிரிவில் உள்ள இளைஞர்களுக்கு சைல்ட் அக்சன் லங்கா நிறுவனத்தினால் பாடசாலைக் கற்றலை நிறைவு செய்த மாணவர்கள் மற்றும்  இளைஞர் யுவதிகளுக்கான நான்கு மாத இலவச கற்கை நெறியை வழங்கி மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந் நிகழ்வில் பிரதி கல்வி பணிப்பாளர் ரீ. யசோதரன், சைல்ட் அக்சன் லங்கா நிறுவன அதிகாரிகள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் என பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *