யாழில் கஞ்சா கலந்த மாவாவை வியாபாரம் செய்த இளைஞன் கைது

யாழ்ப்பாணம் பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நாவந்துறை மண்புட்டி பகுதியில் 470 கிராம் கஞ்சா கலந்த மாவாவுடன் இளைஞன் ஒருவன் யாழ்ப்பாணம் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளான்.

கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாணம் நாவந்துறையைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞன் என தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட இளைஞனிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக் கட்ட விசாரணைகளில், இவர் நீண்ட காலமாக கஞ்சா கலந்த மாவா விற்பனையில் ஈடுபட்டு வந்தமை தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *