நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று இரவு 8.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானார்.
இவரது மறைவுக்கு திரைத்துறையினர் தற்போது இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ரோபோ சங்கரின் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்து தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில்,
“ரோபோ சங்கர்,
ரோபோ புனைப்பெயர் தான்
என் அகராதியில் நீ மனிதன்
ஆதலால் என் தம்பி போதலால் மட்டும் எனை விட்டு நீங்கி விடுவாயா நீ?
உன் வேலை நீ போனாய் என் வேலை தங்கிவிட்டேன். நாளையை எமக்கென நீ விட்டுச் சென்றதால் நாளை நமதே” எனக் குறிப்பிட்டுள்ளார்.

