ஆர்யா வெளியிட்ட கௌஷிக் ராமின் ‘கிறிஸ்டினா கதிர்வேலன்’ பட பாடல்!!

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகரான கௌஷிக் ராம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘கிறிஸ்டினா கதிர்வேலன்’ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘செல்லாட்டி..’ எனும் முதல் பாடலும், பாடலுக்கான காணொலியும் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை பிரபல நடிகரான ஆர்யா அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு படக் குழுவினருக்கும் இசையமைப்பாளருக்கும் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

இயக்குநர் எஸ் ஜே என் . அலெக்ஸ் பாண்டியன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கிறிஸ்டினா கதிர் வேலன் ‘ எனும் திரைப்படத்தில் கௌஷிக் ராம், பிரதீபா, சிங்கம் புலி, கஞ்சா கருப்பு, ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பரத் முனியசாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு என். ஆர் . ரகுநந்தன் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை ஸ்ரீ லட்சுமி ட்ரீம் ஃபேக்டரி என்ற நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் டொக்டர் ஆர் . பிரபாகர் ஸ்தபதி தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்காக காத்திருக்கிறது. இந்நிலையில் திரையுலக வணிகர்கள் மற்றும் ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக படக் குழுவினர், இப்படத்தில் இடம்பெறும் ‘பார்த்ததும் புடிச்சு போச்சு உன்ன.. பறக்குற என்ன செஞ்சி போன..’  எனத் தொடங்கும் முதல் பாடலும் , பாடலுக்கான காணொலியையும் வெளியிட்டுள்ளனர். இந்தப் பாடலை பாடலாசிரியர் மோகன் ராஜன் எழுத , பின்னணி பாடகர் ஜிதின் ராஜ் பாடியிருக்கிறார். இசையமைப்பாளர் என் . ஆர். ரகுநந்தனின் மயக்கும் இசை மெட்டுகளில்.. மெல்லிசையாக ஒலிக்கும் பாடலும், பாடல் வரிகளும், நாயகன்- நாயகி இடையேயான காதல் தொடர்பான காட்சி மொழிகளும் … ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *