கொடிகாமத்தில் அனுமதிப்பத்திரம் இன்றி மரக்குற்றிகளை ஏற்றிச் சென்ற ஒருவர் கைது

கொடிகாமம் பகுதியில் இருந்து அனுமதிப்பத்திரம் இன்றி சிறிய ரக லொறி ஒன்றில் மரக்குற்றிகளை ஏற்றிச் சென்ற ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைதடி பகுதியில் நேற்று(20) வீதி சோதனை நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது அங்கு பயணித்த சிறிய ரக லொறி ஒன்றை நிறுத்தி சோதனையிட்டுள்ளனர். ​

மரக்குற்றிகளை கொண்டு செல்வதற்கான அனுமதிப் பத்திரத்தை சந்தேகநபர் தம்வசம் வைத்திருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து சிறிய ரக லொறியை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று சோதனையிட்ட போது, பல இலட்சம் மரக்குற்றிகளை சட்டவிரோதமாக கடத்த முற்பட்டமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *