பெறுபேற்று அட்டவணையை தரவிறக்கம் செய்ய வசதிகள் செய்யப்பட்டுள்ளன

அனைத்து பாடசாலை மற்றும் தனியார் விண்ணப்பதாரர்களும் இன்று(28) முதல் பெறுபேற்று அட்டவணையை தரவிறக்கம் செய்வதற்கும், பார்ப்பதற்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, https://onlineexams.gov.lk/eic என்ற இணைப்பிற்குச் சென்று பெறுபேற்று அட்டவணை எண்ணை உள்ளிடுவதன் மூலம் பெறுபேற்று அட்டவணையை தரவிறக்கம் செய்ய அல்லது பார்வையிட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ வலைத்தளங்களான http://www.doenets.lk மற்றும் http://www.results.exams.gov.lk ஆகியவற்றிலும் பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும்.

இதற்கிடையில், சகல அதிபர்களுக்கும் https://onlineexams.gov.lk/eic எனும் இணைப்பினூடாக பெறுபேற்றைப் பெற்றுக்கொள்வதற்கு வழங்கப்பட்டுள்ள பயநர் பெயர் மற்றும் கடவுச்சொல் என்பவற்றைப் பயன்படுத்தி உரிய பாடசாலைகளின் பெறுபேற்று அட்டவணைகளை தரவிறக்கம் செய்து அச்சுப் பிரதியொன்றைப் பெற்றுக்கொள்வதற்கான வசதி செய்யப்பட்டுள்ளன.

அனைத்து மாகாண கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி மாகாணம், பிராந்தியத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளின் பெறுபேற்றை https://onlineexams.gov.lk எனும் இணைப்பினூடாக தரவிறக்கம் செய்து பார்வையிடவும் முடியும்.

உரிய பாடசாலைகளின் பரீட்சை பெறுபேற்று அட்டவணை மீளாய்வு செய்யப்பட்ட பெறுபேறு வெளியிடப்பட்ட பின்னர் பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

பெறுபேறுகளை மீளாய்வுக்காக https://onlineexams.gov.lk/eic எனும் இணைப்பினூடாக 2025.05.02 ஆம் திகதி தொடக்கம் 2025.05.16 ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் என அந்த திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *