உலகக் கோப்பைக்கான கால்பந்து தகுதிச்சுற்று போட்டிகளில், ஆர்ஜென்டினா அணி அடுத்த இரண்டு போட்டிகளில் உருகுவே, பிரேசில் அணிகளை சந்திக்க உள்ளது.
இந்த இரண்டு போட்டிகளிலும் ஆர்ஜென்டினா அணிக்காக மெஸ்சி விளையாட இருந்த நிலையில், காயம் காரணமாக அவர் விளையாட போவதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்ஜென்டினா வருகிற 22ஆம் திகதி உருகுவே அணியையும், 26ஆம் திகதி பிரேசில் அணியையும் எதிர்கொள்கிறது.

