இன்றைய நாளுக்கான இராசி பலன்கள்

மேஷராசி அன்பர்களே!
காரியங்கள் இழுபறியாகி முடியும். சிலருக்கு எதிர்பார்த்த பணம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்க வாய்ப்பு உண்டு. முக்கிய முடிவுகள் எடுப்பதில் பொறுமை அவசியம். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீட்டில் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போல நடைபெறும்.
அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்கள் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை மூலம் ஆதாயம் உண்டாகும்.
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகள் கையிருப்பைக் கரைக்கும்.

மிதுனராசி அன்பர்களே!
தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். அரசாங்க வகையில் அனுகூலம் உண்டாகும். சகோதரர்களால் செலவுகள் ஏற்பட்டாலும் மகிழ்ச்சியான செலவாகவே இருக்கும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது. பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். வியாபாரம் வழக்கம்போல நடைபெறும்.
மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தேவையான பண உதவி எப்படியும் கிடைத்து விடும்.
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழியில் ஆதாயம் கிடைக்கும்.
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தேவையற்ற செலவுகளால் மனச் சஞ்சலம் ஏற்படும்.

கடகராசி அன்பர்களே!
எதிர்பார்த்த காரியம் முடிவதில் தாமதம் ஏற்பட்டாலும் ஒருவழியாக அனுகூலமாக முடிந்துவிடும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். மூன்றாவது நபரின் தலையீடு காரணமாக குடும்பத்தில் ஏற்பட்டிருந்த குழப்பம் நீங்கும். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும்.
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.
பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகள் மூலம் செலவுகள் ஏற்படக்கூடும்.
ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரிலிருந்து எதிர்பார்த்த செய்தி கிடைப்பது தாமதமாகும்.

சிம்மராசி அன்பர்களே!
தேவையான பணம் இருந்தாலும் தேவையற்ற செலவுகளும் ஏற்படும். தாயாருடன் ஏற்பட்டிருந்த மனஸ்தாபம் நீங்கும். அவர் மூலம் பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். பிற்பகலுக்கு மேல் உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது. வியாபாரம் வழக்கம்போல் நடைபெறும். பணியாளர்களால் செலவுகள் ஏற்படும்.
மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குடும்பத்துடன் தெய்வ வழிபாடுகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.
பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க வகையில் ஆதாயம் ஏற்பட வாய்ப்பு உண்டு.

கன்னிராசி அன்பர்களே!
காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். முக்கிய முடிவுகளைத் துணிந்து எடுப்பீர்கள். குடும்பத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப் படும். உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத்துணை ஆதரவாக இருப்பார். பிற்பகலுக்கு மேல் திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும்.
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும்.
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கொடுத்த கடன் தொகை திரும்பக் கிடைக்கும்

துலாராசி அன்பர்களே!
முக்கியமான முடிவுகள் எதுவும் எடுக்கவேண்டாம். கூடுமானவரை வீண் அலைச்சலைத் தவிர்த்துவிடவும். உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். பிள்ளைகளுக்காக செலவு செய்யவேண்டி வரும். உறவினர்களுடன் பேசும்போது பொறுமை அவசியம். குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் சிறுசிறு தடைகள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் பணியாளர்களால் செலவுகள் ஏற்படும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகள் ஏற்படக்கூடும்.
சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது.
விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.

விருச்சிகராசி அன்பர்களே!
வழக்கமான பணிகளில் மட்டுமே ஈடுபடவும். எதிர்பாராத செலவு களைச் சமாளிக்கக் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலை ஏற்படக்கூடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தந்தையுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால் அவருடன் பேசும் போது வார்த்தைகளில் நிதானம் தேவை. வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும்.
விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல்நலனில் கவனமாக இருப்பது அவசியம்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.
கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறவினர்களுக்காக செலவு செய்ய நேரிடும்.

தனுசுராசி  அன்பர்களே!
பிற்பகலுக்கு மேல் அனைத்து விஷயங்களிலும் பொறுமையைக் கடைப் பிடிக்கவும். கணவன் – மனைவி இருவரும் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. பணத்தை செலவு செய்யும்போது அவசியமான செலவுதானா என்று யோசித்துச் செய்வது நல்லது. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் வீண் பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் அவர்களுடன் கனிவாக நடந்து கொள்வது அவசியம்.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழியில் வீண்பிரச்னைகள் ஏற்படக்கூடும்.
பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.

மகரராசி  அன்பர்களே!
எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் கிடைக்கும். வியாபாரத்தில் விற்ப னையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும்.
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களிடம் விவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது,

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

கும்பராசி அன்பர்களே!
புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும். உறவினர்கள் வகையில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். சகோதரர்கள் நீங்கள் கேட்கும் உதவியை மறுக்காமல் செய்வார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் அனுகூலம் உண்டாகும்.
சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் செலவுகளை திட்டமிட்டுச் செய்வது நன்று.
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும்.

மீனராசி  அன்பர்களே!
சகோதரர்களிடம் எதிர்பார்த்த காரியம் இழுபறியாகி முடியும். ஆனால், செலவுகளைச் சமாளிப்பதில் சிரமம் எதுவும் இருக்காது. தந்தையாரின் உடல் ஆரோக்கியம் மேம்படும். பிள்ளைகளால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். அரசாங்க வகையில் இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக முடியும். வியாபாரம் எப்போதும்போல் நடைபெறும். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பார்கள்.
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் மனதில் சஞ்சலம் ஏற்படும்.
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *