புத்தளத்தில் இராணுவத்தின் ஏற்பாட்டில் எட்டாவது முறையாக பல்துறை மருத்துவ முகாம்

பல்துறை மருத்துவ முகாம் எட்டாவது முறையாகவும் புத்தளம் மாவட்டத்தை மையமாகக் கொண்டு இராணுவத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ அவர்களின் எண்ணக்கருவிற்கமைய, , காயமடைந்த போர்வீரர்கள், ஓய்வுபெற்ற போர்வீரர்கள்/செயல்பாட்டு காரணங்களுக்காக வீரமரணமடைந்த  போர்வீரர்களின் உறவினர்கள் மற்றும் சேவையில் உள்ள போர்வீரர்களின் உறவினர்களுக்கான விசேட பல்துறை மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புத்தளம் சின்னவில்லுவத்த இராணுவ முகாமில் எதிர்வரும் 21 ஆம் திகதி காலை 07.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை பல்துறை மருத்துவ முகாமினை நடாத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *