இன்று(20), சினமன் லைப் – சிட்டி ஒப் ரீம்ஸ் வளாகத்தில் நடைபெற்ற அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் சங்கப் பேரவையின் 75வது ஆண்டு மாநாட்டில்,
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கௌரவிக்கப்பட்டார்.
“சமூகத்திற்கும் நாட்டிற்கும் விலைமதிப்பற்ற மற்றும் பெறுமதியான சேவைகளை வழங்கியதற்கான அங்கீகாரமாக,”
“த வை பேர்சனலிட்டி ஒப் த இயர் 2025” என்ற விருதை இலங்கைப் பாராளுமன்றத்தின் பிரதிச் சபாநாயகர் வைத்தியர் றிஸ்வி சாலிஹ் வழங்கி கௌரவித்தார்.
— ஊடகப் பிரிவு

