நுவரெலியாவில் தீபாவளி பண்டிகையுடன் இணைந்து உணவு கண்காட்சி மற்றும் இசை நிகழ்ச்சி

நுவரெலியா மாவட்டத்தில் நடைபெறும் தேசிய தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு, நுவரெலியாவின் பழமையான நட்சத்திர ஹோட்டலான கிராண்ட் ஹோட்டலால் ஐந்து நாள் உணவுக்கண்காட்சி மற்றும் இசை நிகழ்ச்சி நேற்று(20) மாலை 4 மணிக்கு உத்தியோகப்பூர்வமாக கிரான்ட் ஹோட்டல் பணிப்பாளர், முகாமையாளர்கள், உத்தியோகத்தர்கள், வர்த்தகர்கள், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஆகியோரின் பங்கு பற்றலுடன் திறந்து வைக்கப்பட்டது.

 

நுவரெலியா வணிக சமூகம் மற்றும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை இலக்காகக் கொண்டு, இந்த கண்காட்சியை 25 ஆம் திகதி வரை நடத்த ஏற்பாட்டுக் குழு ஏற்பாடு செய்துள்ளது.

 

இந்த கண்காட்சியில் தீபாவளி பண்டிகைக்காக கலாசார ரீதியாக தயாரிக்கப்பட்ட உணவுகள் உட்பட பல்வேறு வகையான இந்திய உணவுகள் உள்ளன.

 

கண்காட்சியின் தொடக்க விழாவில் நுவரெலியா நகர்ப்புற வணிக சமூகம் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *