இலங்கைத் தமிழராகும் வாஹிசன், இந்திய திரை உலகில் தனது திரையுலகப் பயணத்தை ஆரம்பித்துள்ளார். இயக்குநர் வினோத் ராஜேந்திரன் இயக்கும் ‘மைனர்’ திரைப்படத்தில், முக்கிய கதாநாயகனாக (ஹீரோவாக) அவர் அறிமுகமாகிறார்.
இது அவரது முதல் இந்திய தமிழ் திரைப்படமாகும். இந்தப் படத்தில் நாயகியாக நடிகை ஜனனி இணைந்து நடிக்கிறார். ‘மைனர்’ எனும் திரைப்படம். வாஹிசனின் இயல்பான நடிப்பு, குரல் வரையறை மற்றும் தனித்துவமான ஸ்கிரீன் ப்ரசென்ஸும், புதிய நம்பிக்கையை திரை உலகில் உருவாக்கியுள்ளன.
இத்திரைப்படம் இந்தியத் தமிழ் சினிமாவில் இலங்கைத் தமிழரின் புதிய முன்னேற்றத்தை சித்தரிக்கின்றது. எல்லைகளைத் தாண்டி, கலை மொழியாக தமிழ் சினிமா இணைப்பதாக வாஹிசனின் பயணம் நிரூபிக்கிறது.
இந்த சாதனையானது, இலங்கையில் உள்ள பல இளைஞர்களுக்கும், சிறந்த கலை இலட்சியங்களைக் கொண்டவர்களுக்கும் ஊக்கமும் உத்வேகமுமாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

