புங்குடுதீவில் உள்ள ஆலயமொன்றில் அண்ணளவாக 10 இலட்சம் ரூபா திருடப்பட்ட நிலையில், சந்தேகத்தில் அடிப்படையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆலயத் தரப்பினரால் ஊர்காவற்துறை பொலிஸாரிடம் நேற்றுமுன்தினம் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் அடிப்படையிலேயே, நேற்று இரண்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

